மன்னார் நிருபர்
30-12-2020
‘மரங்களை பாதுகாப்பதன் ஊடாக நாட்டை வளப்படுத்துவோம்’ எனும் தொணிப்பொருளில் மக்கள் மத்தியில் விழிர்புணர்வை ஏற்படுத்தும் செயற்திட்டம் இன்று புதன் கிழமை காலை நிவேதனம் உள வளத்துனை சேவைகள் நிலையம் மற்றும் எங்கள் இயற்கை பூமி அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் நகர பேரூந்து நிலையம் முன் இடம் பெற்றது.
வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபடும் மக்கள் சூழலை பாதுகாப்பதில் அக்கறை கொள்வதுடன் மரங்களையும் பாதுகாத்து அடுத்த தலை முறையினருக்கு சிறந்த சூழலை வழங்க வேண்டும் என்ற நோக்கிற்கு அமைவாக குறித்த செயற்திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன் , மன்னார் நகரசபை செயலாளர் பிறிட்டோ மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் , நிவேதனம் அமைப்பின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு மர நடுகையின் அவசியம் தொடர்பாகவும் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டில் கலந்து கொண்டனர்.