நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுள் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினரான வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் ஏனைய மாகாணங்களில் நூற்றுக்கு 50 வீதமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே மேல் மாகாணத்தை போன்று மத்திய மாகாணம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
எனவே சுகாதாரதரப்பினர் குறித்த பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.