இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கிழக்கு மாகாணத்திலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, கிழக்கு மாகாணத்தில் 15 ஆயிரத்து 33 குடும்பங்களை சேர்ந்த, 49 ஆயிரத்து 634 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில். கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் 8 ஆயிரத்து 814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 ஆயிரத்து 299 பேர் குடும்பங்களை சேர்ந்த 40 ஆயிரத்து 696 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வடமாகாணத்தில் ஆயிரத்து 672 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 358 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.
இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 800 பேரும், யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 745 பேரும் பாதிக்கபட்டுள்ளனர்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் 6 இடர்தங்கல் முகாம்களில், 57 குடும்பங்களை சேர்ந்த 164 பேர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.