(மன்னார் நிருபர்)
(20-01-2021)
வவுனியாவில் இருந்து மன்னாருக்கு வியாபார நடவடிக்கைகளுக்காக கோழிகளை ஏற்றி வந்த வேன் தள்ளாடி சந்தியில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
-குறித்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை(19) இரவு இடம் பெற்றுள்ளது.
வவுனியாவில் இருந்து மன்னாருக்கு கோழிகளை ஏற்றிக் கொண்டு வந்து மன்னார் பகுதியில் வியாபார நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு மீண்டும் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த போது மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,தள்ளாடி சந்தியில் குறித்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதன் போது வாகன சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளதோடு, வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.
மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.