பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மொத்தம் 430 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரிய 30 புள்ளிகளை வசப்படுத்தியது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மொத்தம் 430 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
நியூசிலாந்து 420 புள்ளிகளும் ஆஸ்திரேலியா 332 புள்ளிகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆனால் புள்ளிகளுக்குரிய சதவீதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் நிலையில் அதிலும் இந்தியா முதலிடம் (71.7 சதவீதம்) வகிக்கிறது. நியூசிலாந்து 70 சதவீதத்துடன் 2-வது இடத்திலும் ஆஸ்திரேலியா 69.2 சதவீதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன.