65,000 நிதி அன்பளிப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்டம் மூங்கிலாறு கிராமத்தைச் சேர்ந்த கந்தையா சிவானந்தன் அவர்கள் கடந்த கால யுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டு இரண்டு கண் பார்வை திறனை இழந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றார்.
அவரின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு மாடு வளர்ப்பிற்கான உதவியினை செய்து தருமாறு வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் வன்னி விழிப்புலனற்றோர் அமைப்பினால் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் ரூபா 65,000பெறுமதியில் சினைப்பருவத்தில் உள்ள நல்லின மாடு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.