பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்.
(மன்னார் நிருபர்)
(29-01-2021)
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்தில் நாளைய தினம் சனிக்கிழமை(29) சுகாதார துறையினருக்கு முதல் முதலாக செலுத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 1280 கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
அவற்றை எமது சுகாதார துறையினருக்கு முதுல் கட்டமாக செலுத்தப்படவுள்ளது. 2 ஆம் கட்டமாக வழங்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் 60 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
-இதே வேளை மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 170 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்களில் 1153 பேர் இந்த மாதம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.