கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டைளையின் இலவசக் கணினி பயிற்சி நிலையம் நேற்று புதன் கிழமை திறந்து வைக்கப்பட்டது.
லண்டன் ரட்ணம் பவுண்டேசன் அமைப்பின் நிதி அனுசரணையில் கல்வி வளர்ச்சிஅறக்கட்டயால் கிளிநொச்சி கரடி போக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைகழகத்தின் பொறியியல் பீட பீடாதிபதி அ. அற்புதராஜா, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கி. கமலராஜன் ஆகியோர் உத்தியோகபூர்வமாக திறந்து மாணவர்களிடம் கையளித்துள்ளனர். 20 கணினிகளுடன் இந் நிலையம் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சிகளை வழங்கவுள்ளது.
கல்வி வளர்ச்சி அறகட்டளையின் உப தலைவரும் அதிபருமான அ.பங்கையற்ச்செல்வன் தலைமையில் இடம்பெற்றஇந்த நிகழ்வில் ஆங்கில பாட உதவிக் பணிப்பாளர் திரு.சுதர்சன் ,பொறியியற்பீட விரிவுரையாளர் கலாநிதி கதிர்காமநாதன் கல்வி வளர்ச்சி அறகட்டகளையின் உறுப்பினர்கள். பணியாளர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்