இலங்கையில் ஜேவிபி என்று தன்னை அடையாளப்படுத்தி இடதுசாரிக் கொள்கைகளை கடைப்பிடித்து அரசியலுக்கு வந்து பின்னாளில் தமிழர் விரோத மற்றும் இந்திய விரோத அரசியல்வாதியாக தோற்றம் பெற்ற அமைச்சர் விமல் வீரவன்ச தற்போது பல நெருக்கடிகளை சநதிப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வுpமல் வீரவன்ச முன்னைய அரசாங்கங்களில் அமைச்சராக பதவி வகித்தபோது பல குற்றச்சாட்டுக்களைச் சந்தித்தவர். அவர் தற்போது ஆளும் கட்சி உறுப்பினர்களின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஊடக சந்திப்புக்களை நடத்தும்படி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அதற்கமையரூபவ் எதிர்வரும் சில தினங்களில் அமைச்சர் விமல் பற்றி கடும் விமர்சனம்ரூபவ் எதிர்ப்பு கருத்துக்களை முன்வைத்து ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் எம்.பிக்கள் தயாராகி
வருவதாகவும் இதனால் அவர் பல நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கவேண்டும் என தெரிவித்த கருத்தால் ஆளும் கட்சிக்குள் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச. அவர் தனது கருத்து தொடர்பில் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டுமென விடாப்பிடியாக உள்ளார் முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்.
எனினும் தான் ஒருபோதும் மன்னிப்பு கோரமாட்டேன் என அடம்பிடிக்கிறார் அமைச்சர் விமல்.