ஒன்றாரியோ பாடசாலைகளில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் நீண்ட கால குற்றச் செயல்களுக்கு உட்பட்டவர்கள்
ஒன்றாரியோ கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெட்சே தெரிவிப்பு
(ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
“அண்மையில் எமது ஒன்றாரியோ கல்வி அமைச்சின் அதிகாரிகளினால் கண்டு பிடிக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் சுமார் 28 பேரில் பெரும்பாலானவர்கள் தாங்கள் ஆசிரியப் பதவிகளில் இணைந்து கொள்வதற்கு முன்பதாகவு அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் முன்னைய ஒன்றாரியோ லிபரல் அரசானது இந்த குற்றவாளிகளை கண்டும் காணாதது போல இருந்த படியால்தான் அவர்கள் அண்மைக் காலங்களிலும் இவ்வாறாக மாணவர்கள் மீதான பாலியல் தொல்லைகளுக்கு காரணமாக இருந்துள்ளார்கள். இவ்வாறான மோசமான ஆசிரியர்களினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோர்களது முறைப்பாடுகளைத் தொடர்ந்து எமது அமைச்சு நடவடிக்கை எடுததுள்ளது. இதனால் அவர்களது ஆசிரிய பதவி சான்றிதழ்கள் கூட திரும்ப பறிக்கப்பட்டுள்ளன”
இவ்வாறு கூறினார் ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமையன்று ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெட்சே அவர்கள் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள பல்லின பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைகாட்சி ஊடகங்களின் செய்தியாளர்கள் ஆகியோரை இணையவழி ஊடான சந்தித்து உரையாடினார். அத்துடன் அவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அன்றைய தினம் அமைச்சர் எடுத்துக்கொண்ட முக்கியமான விடயம், ஒன்றாரியோ மாகாணத்தின் பாடசாலைகளின் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தினால் குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகி தொடர்ந்து விசாரணைகளுக்கு முகம் கொடுத்து தண்டனை பெற்றுள்ள சுமார் 28 ஆசிரியர்கள் அல்லது கல்வியாளர்களின் விடயமே ஆகும்.
அப்போது உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் முன்வைத்த கேள்வி ஒன்றுக்கு ம பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“அண்மையில் வெளியான தங்கள அறிக்கையில் குற்றச்சாட்டப்பட்டுள்ள மேற்டி 28 ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அண்மைக் காலத்தில் இடம்பெற்றவையாக அன்றி நீண்ட காலத்திற்கு முன்னர் இடம்பெற்றவையா? என்றும் அவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோரை உங்கள் அமைச்சு எவ்வாறு ஆற்றுப்படுத்தியது? என்ற கேள்வியையே ‘உதயன்’ பிரதம ஆசிரியர் அமைச்சரிடம் முன்வைத்தார்.
அப்போது பதிலளிக்கும் வகையில் அமைச்சர் தொடர்ந்து பேசும் போதும் பின்வருமாறு தெரிவித்தார்.
” இந்தக் குற்றச்சாட்டுக்களில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பல தாம் ஆசிரியப் பதவிகளில் சேர்வதற்கு முன்னரேயே இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள் என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். அவர்கள் ஆசிரிய பதவிகளில் இணைந்த பின்னர் மாணவர்களை தங்கள் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தியும் அவர்களை துன்புறுத்தியும் உள்ளார்கள். ஏற்கெனவே பல குற்றச்சாட்டுக்களைக் கொண்ட இவர்கள் கடந்த லிபரல் கட்சி அரசாங்கத்தின் போது விசாரிக்கப்பட்டாலும் அவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்படவில்லை.
இதற்கு காரணம் அப்போது நடைமுறையிலிருந்த சட்டங்களே காரணம். மேற்படி சட்டங்களின் மூலம் அவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்குரிய சாதகமான பிரிவுகள் அங்கு இருந்தன.
ஆனால் எமது அரசாங்கம் மேற்படி சட்டங்களை மாற்றிவிட்டது. ஒன்றாரியோ மாகாணததில் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் நிறுவனமான ‘ஒன்றாரியோ ஆசிரியர் கல்லூரி” நிர்வாகத்தினர் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி அவர்களை மீண்டும் பணிகளில் அமர்த்தினார்கள்.
ஆனால் எமது அரசாங்கமும் எமது கல்வி அமைச்சும், இவ்வாறான குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியாத அளவிற்கு சட்டங்களை மாறறியிருக்கின்றோம்.
அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரை எமது கல்வி அமைச்சின் அதிகாரிகள் ச்நதித்து உரையாடி அவர்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்கின்றார்கள். எவ்வாறாயினும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரின் பதவிகளை நாம் பறிக்கின்றோம். அத்துடன் அவர்கள் செய்த குற்றச் செயல்களுக்காக ஒன்றாரியே நீதி மன்றத்தின் மூலம் விசாரிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்படும்” என்றார் அமைச்சர் ஸ்டீபன் லேட்சே.
இங்கு காணப்படும் படங்களில் அமைச்சர் மற்றும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் திரு ரூடி மற்றும் பஞ்சாபி தொலைக்காட்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஆகியோர் காணப்படுகின்றனர்.