(மன்னார் நிருபர்)
(26-02-2021)
மன்னார் மாவட்ட விளையாட்டு பிரிவும் மடு பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த பெரு விளையாட்டுகளுக்கான பயிற்சி முகாம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (26) காலை 9 மணியளவில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தட்டனா மருதமடு விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
உதைபந்து,கரப்பந்து மற்றும் கால் மேசைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சி முகாம் இவ்வாறு இடம் பெற்றது.
குறித்த பயிற்சி முகாமில் வட மாகாண விளையாட்டு பணிப்பாளர் எஸ்.முகுந்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு, மேலும் மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரிகளும் பெரு விளையாட்டுகளில் பங்குபெற்றும் வீரர்களும் கலந்து கொண்டிருந்ததோடு, பயிற்சிகளையும் வழங்கி வைத்தனர்.
குறித்த பயிற்சி முகாமிற்கான நிதி உதவியினை கிராம அலுவலகர் எஸ்.லுமாசிறி அவர்களின் வேண்டு கோளுக்கு இனங்க மன்னார் பறப்பாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவையாளர் .எம்.எடிசன் ; வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.