முன்னரேயே திட்டமிட்டபடி நாளை ஞாயிற்றுக்கிழமை 28ம் திகதி நடைபெறவுள்ள கனடா உதயன் வெள்ளிவிழா ஞாபகார்த்த பேச்சுப் போட்டி.
இரண்டாம் நாள் நிகழ்வில் போட்டியாளர்களின் பேச்சுக்கள் நிறைவுற்ற பின்னர் விடப்படும் இடைவேளையின் போது இனிய பாடல்களைக் கேட்டு மகிழலாம்.
இன்றும் நாளையும் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட இளம் பேச்சாளர்களில் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் நடுவர்கள் கூடி முடிவகளை தீர்மானிக்கும் சுமார அரை மணி நேரத்திற்கு பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர் ரசிக்கும் வண்ணம் தாயகப் பாடல்கள், பாரதியார் பாடல்கள் மற்றும் திரையிசைப் பாடல்கள் ஆகியவற்றைக் கேட்டு மகிழலாம்.
மேற்படி பாடல்களைப் பாடுவதற்கு கனடாவில் புகழ்பெற்ற இசைப் பயிற்சி நிறுவனமான பைரவி நுண்கலைக் கூடத்தின் பாடகர்கள் நேரயாகக் கலந்து கொள்கின்றார்கள். அவர்களோடு மலேசியாவின் பிரபல பாடகர் ரவாங் ராஜா அவர்களும் திரையிசைப் பாடல்களால் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார் என்பதையும் அறியத்தருகின்றோம் / மேலதிக விபரங்களுக்கு 1416 732 1608 என்னும் வற்ஸ் அப் இலக்கத்தில் தொடர்புகொள்ளவும் அல்லது என்னும் மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்
நாளை எமது இணையவழி நிகழ்ச்சிக்கான இணைப்பிற்குச் செல்ல,
ZOOM ID:- 827 6566 9766 PASSCODE:- 892482
உங்களுக்கு பாடல்களை வழங்கவுள்ள பாடகர்கள், மலேசியா ரவாங் ராஜா மற்றும் கனடியப் பாடக பாடகிகள் ஆகிய பின்வருவோர்:- ராஜ கோபுரம் எங்கள் தலைவன் – சிவகுமாரன் முருகையா. என்று தணியும் இந்த சுதந்திர தாகம் (பாரதியார் பாடல்) – சரணியா பத்மகாந்தன்
காக்கை சிறகினிலே நந்தலாலா (பாரதியார் பாடல்) – பிறேமிகா ஜெயச்சந்திரன்
நின்னை சரண் அடைந்தேன் கண்ணம்மா (பாரதியார் பாடல்) – கிருத்திகா ரவிக்குமார்
ஒரு தலைவன் வரவுக்கை காத்திருந்தோம் – அன்னநாதன் பெர்னாண்டோ
கனடா உதயன் பத்திரிகை நிறுவனத்தோடு நீண்ட காலம் கைகோர்த்து பயணிக்கும் பைரவி நுண்கலைக் கூடத்தின் அதிபர் மற்றும் ஆசான், தி. ரவிச்சந்திரன் அவர்களுக்கு கனடா உதயன் பத்திரிகைய நிறுவனம் நன்றி தெரிவிக்கின்றது.