மதபோதகர்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்
ஒன்றாரியோ அரசு தற்போது அறிவித்துள்ள புதிய சாம்பல் நிற பிரதேசங்களில் மக்களை வேறுபட்ட இடங்களுக்கு அனுமதிக்கும் விடயத்தில், தேவாலயங்களிலும் பார்க்க மதுக்கடைகளில் அதிகமானவர்களை அனுமதிப்பது எப்படி?
ஏன ரொரன்ரோவில் உள்ள மதபோதகர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒன்றாரியோஅரசானது இன்று திங்கட்கிழமை தொடக்கம் ரொண்டோ மற்றும் பீல் பிராந்தியம் “சாம்பல் நிற பிரதேசத்திற்குள்” நுழைய உள்ள நிலையில், டொராண்டோ பேராயர் உட்பட சில மதபோதகர்கள் மதக் வழிபாடுகள் மீதான தொடர்ச்சியான கட்டுப்பாடுகளுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ள இதே வேளையில் “எங்கள் நம்பிக்கைகளுக்கு எதிராகவும் சமூகங்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் ஏற்றத்தாழ்வுகள் இவை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திங்கட்கிழமை அதிகாலை 12:01 மணி நிலவரப்படி, டொராண்டோ மற்றும் பீல் பிராந்தியத்தில் கடுமையான மக்கள் அனுமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன, இது பெரிய வர்த்தக வளாகங்கள் உட்பட அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களில் 25 சதவீத மக்கள் தொகை கட்டுப்பாட்டுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆனது திருமணங்கள் மற்றும் அரண இறுதிச் சடங்குகள் போன்றவையும் சற்றே பெரிய மத வழிபாட்டு கூட்டங்களையும் அனுமதிக்கிறது, இது உட்புற விழாக்களுக்கு ஐந்து முதல் 10 பேர் வரை அதிகரிக்கும், இருப்பினும் வழக்கமான உட்புற சேவைகள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் கிறிஸ்த்தவ தேவாலயங்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்தில், கார்டினல் தாமஸ் காலின்ஸ், புதிய திறக்கும் திட்டமானது, தேவாலயத்தின் இடவசதியைப் பொருட்படுத்தாமல் மதக் கூட்டங்களை நியாயமற்ற முறையில் நடத்த முடியாமல் தடுக்கின்றது
“எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகள் உணர்வுபூர்வமாக மத சுதந்திரத்தை நசுக்க விரும்புகிறார்கள் என்று நாம் நம்பவேண்டிய நிலையில் உள்ளோம். அவர்கள் மிகவும் கடினமான நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர்கின்றோம் எவ்வாறாயினும், நாங்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், ”என்று மதபோதகர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
“இவற்றில் எது மிகவும் அவசியமானது என்று நாங்கள் கருதுகிறோம்?” என்று காலின்ஸ் கேட்டார்.
தொற்றுநோய் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், “நாங்கள் எங்கள் செயல்களில் விவேகமுள்ளவர்களாக இருக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ள மதபோகர்கள் ஆயினும், வழிபாட்டுத் தலங்கள் மீதான கட்டுப்பாடுகள் “தன்னிச்சையாக எடுக்கப்படுகின்ற முடிவுகளால் வழிபாடு செய்ய விரும்புவர்களை பாதிக்கின்றது எனவே இதனை எதிர்த்து நாம் குரல் எழுப்ப வேண்டும்” என்று கோருவதற்கு திருச்சபை உறுப்பினர்கள் தங்கள் உள்ளூர் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
டொராண்டோ மற்றும் பீல் பிராந்தியத்தில் திங்கட் கிழமை முதல் நடைமுறைக்கு வரும் ஒரு மாற்றமே சில்லறை விற்பனையாளர்களுக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட மறு திறப்பு என்றே கூறப்படுகின்றது