(மன்னார் நிருபர்)
(31-03-2021)
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை எஸ்.ஜே.வி செல்வ நாயகத்தின் 123ஆவது ஜனன தின நிகழ்வு இன்று புதன் கிழமை (31) மாலை 4.45 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலக்ததிற்கு முன் அமைந்துள்ள தந்தை செல்வா சிலையடியில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இலங்கை தமிழரசு கட்சி மன்னார் கிளையின் உறுப்பினர்கள், மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன் போது தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, சிறப்புரையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.