கதிரோட்டம் 19-06-2020 வெள்ளிக்கிழமை .
இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் வெற்றிகளை விட தோல்விகளையும் துயரங்களையும் தான் மக்கள் அதிகளவில் அனுபவித்துள்ளார்கள். தமது வாக்குகளை அளித்து எத்தனையோ ஆண்டுகளாக தங்கள் பிரதிநிதிகள் என்ற நம்பிக்கையில் தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தார்கள். ஆனால் தமிழ் மக்கள் தமது அரசியல்வாதிகளால் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதை அவதானித்து இளைஞர்கள் தமது பிரதிநிதிகளிடம் கேள்விகளை முன்வைத்த போது அவர்களது கேள்விகiயும் அவர்களையும் புறக்கணித்து நடந்த தலைவர்கள் மீது கொண்ட வெறுப்புக் காரணமாகவே இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆயுதப் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானம் எடுத்து களத்தில் இறங்கினார்கள்.
ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்தது என்று எழுதுவதிலும்; பார்க்க தோற்கடிக்கப்பட்டது என்பதே ம்pகவும் பொருத்தமானது. அது எவ்வாறு என்பதை எழுத நூறு பக்கங்களாவது வேணடும்.
இவ்வாறு பாராளுமன்றத் முறையை புறக்கணித்த எமது போராளிகளின் எண்ணத்தை முறியடிக்க அந்த போராட்டத்தையே தோற்கடிக்க உலக நாடுகள் பல ஒன்றிணைந்தன. அந்த |தோற்கடிப்பிற்காக, சில நாட்டுத் தலைவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் எங்கள் தலைவர்கள் என்று ‘முழக்கமிட்ட வண்ணம்” தேர்தலில் போட்டியிடுவதை நாம் இன்றும் காண்கின்றோம்.
இவற்றையெல்லாம் விரிவாக எழுதும் நோக்கம் எமது கதிரோட்டத்திற்கு நிச்ச்யமாக இல்லை. ஆனால் மீண்டும் பாராளுமன்ற அரசியலை நம்பிய வண்ணம் அந்த ஆசனங்களுக்காக ஆட்களைத் தேடும் பொதுத் தேர்தல் தான் இனிமேல் நடைபெறப் போகின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த வேளையில் எமது மக்களுக்கு பாரதிய பொறுப்புக்கள் உள்ளன. எம்மிடம் வாக்கு கேட்டுவரும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களைப் பற்றிய கணிப்பீடு தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமானது. எமது பார்வைக்கு கிட்டிய வேட்பாளர் பட்டியலிலிருந்து நாம் அறிந்து கொண்டவை எவையென்றால், வீட்டுச் சின்னத்தில் தமிழர் பகுதியில் போட்டியிடுகின்றவர்களிலும் பார்க்க ஏனைய கட்சிகள் அல்லது குழுக்கள் ஆகியவற்றில் தான் பல புதிய முகங்களாக இருந்தாலும், அவர்களிடத்தில் இளமைத் துடிப்பும் புலமையின் பலமும் ஆளுமையின் திரட்சி யும் உள்ளன என்பதைக் கண்டு கொண்டோம். இந்த சந்தர்ப்பங்களில் தனித்தனியாக பெயர்களைக் குறிப்பிட்டு எழுதும் எண்ணம் தோன்றாத நிலையில் எமது மக்கள் நன்கு யோசித்து பொய்யான வாக்குறுதிகளுக்கு மீண்டும் |சோரம் போய்விடாமல் வாக்களித்து ஆளுமையும் இளமைத் துடிப்பும் உள்ளவர்களை அந்த ஆசனங்களில் அமர்வதற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதை ஒரு ஆலோசனையாகத் தருகின்றோம்.