கனடாவில் தங்கியுள்ள 90000 அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச பட்டதாரிகள் நிரந்ததிர வதிவிட உரிமை பெறவுள்ளார்
கனடாவில் தற்போது தங்கியிருந்து சுகாதார சேவைகள், வைத்தியசாலைகள் போன்ற அத்தியாவசியமான துறைகளில் தற்காலிகமாகப் பணியாற்றும் வெளிநாட்டவர்கள் மற்றும் சர்வதேச பட்டதாரிகள் ஆகியோர் அடங்கிய 90000 க்கும் அதிகமானவர்கள் விரைவில் கனடிய நிரந்தர குடியுரிமை பெறும் வண்ணம் அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.
இந்த நடை முறையின் மூலம் கனடாவில் வைத்தியர்கள், தாதிகள், மற்றும் சுகாதார சேவையாளர்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளில் உள்ள வெற்றிடங்கள் அனைத்தும் நிரப் பெற்று தகுதியானவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டு அவர்கள் மேலும் சலுகைளைப் பெறும் வண்ணம் நகர்த்தப்படுவார்கள்.
அத்துடன் சர்வதேச மாணவர்கள் என்ற வகையில் ஏற்கெனவே கனடாவில் தங்கியிருந்து தங்கள் கல்வியைத் தொடர்ந்து பட்டம் பெற்றவர்கள் அல்லது தற்போது தங்கள் பட்டப்படிப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்கள் ஆகியோர் கூட நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து கனடாவில் பல்வேறு துறைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்பும் வண்ணம் அவர்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படும்.
இந்த ஏற்பாடுகள் மற்றும் திட்டங்கள் மூலம் தகுதியும் ஆற்றலும் உடைய வெளிநாட்டவர்களுக்கு கனடாவில் நிரந்தரமாகத் தங்கியிருக்க அனுமதி கிடைக்கும் அதே வேளையில் அவர்கள் அனைவரும் கனடாவின் அத்தியாவசிய சேவைகளில் இணைந்து பணியாற்றி அதன் மூலம் தற்போதைய கோவிட்-19 அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள கனடியர்களுக்கு சேவையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. மேலும் நிரந்தர குடியுரிமைப் பெறும் 90000க்கும் அதிகமானவர்கள் கனடாவின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உழைக்கும் சந்தர்ப்பத்தையும் அவர்கள் பெறுகின்றார்கள்”
இவ்வாறு தெரிவித்தார் கனடாவின் குடிவரவு, அகதிகள் விவகாரங்கள் மற்றும் குடியுரிமை அமைச்சர் Honourable Marco E. L. Mendicino.
இன்று புதன்கிழமை 14ம் திகதி மதியத்திற்கு சற்று பின்னராக, கனடாவின் தலைநகரான ஒட்டாவாவிலிருந்து தொலைபேசி வாயிலாகவும் இணையவழி ஊடாகவும் கனடாவின் பல பகுதிகளிலும் ..இருந்து கலந்து கொண்ட குடிவரவு ஆலோசகர்கள் , பல்கலைக் கழக விரிவுரிவையாளர்கள் மற்றும் ஊடகங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் மத்தியில் உரையாற்றியபோது தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது, மிகுந்த உற்சாகத்தோடு பின்வரும் விபரங்களைத் தெரிவித்தார்.
” கடந்த வருடம் உலகின் பல நாடுகளையும் தாக்கிய கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக உலக மக்கள் பலவகையிலும் பாதிக்கப்பட்டார்கள். பொருளாதார ரீதியாக நாடுகள் பாதிக்கப்பட்ட போதும் அந்தந்த நாடுகளில் வாழ்ந்த மக்களும் பாதிக்கப்பட்டார்கள்.
மறுபுறத்தில் மிகவும் அத்தியாவசிய சேவைகள் என்று கருதப்பட்ட வைத்தியர்கள், தாதிகள், ஏனைய சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் கனடாவில் அதிகளவில் தேவைப்பட்டார்கள். இது போன்று, உணவு தொடர்பான துறைகளிலும் வெற்றிடங்கள் ஏற்பட்டன.
அந்தத் வெற்றிடங்களை சமாளிக்க கனடாவிற்கு உயர் கல்வி பெறுவதற்காக விண்ணப்பித்து அனுமதி பெற்று வந்த சர்வதேச மாணவர்கள் எமக்கு உதவினார்கள். மிகவும் கஸ்டமான சூழ்நிலைகளில் இந்தப பிரிவினர் அனைவரும் கனடாவின் அவசியமான துறைகளில் தங்கள் பங்களிப்பை வழங்கினார்கள். எனவே அவர்களை நாம் கனடாவிற்குள் உள்வாங்குவதன் மூலம் எமது பொருளாதாரத்தையும் நாம் கட்டியெழுப்பலாம்..
இந்தத் துறைகளைப் போன்று நிர்மாணத்துறை வீதிகள் பாலங்கள் கட்டடங்கள் அமைத்தல் போன்ற பிரிவுகளிலும் பயிற்சி பெற்ற தொழிலாளர் ஆயிரக்கணக்கானவர்கள் தேவைப்படுகின்றார்கள். எனவே எமது இந்த புதிய குடிவரவு திட்டமானது வெளிநாட்டவர்கள் பலருக்கும் நன்மை தரும் இந்த வேளையில் எமது கனடாவின் வளர்ச்சிக்கும் அவர்கள் பங்களிப்பை வழங்கும் சந்தர்ப்பங்களை எமது அரசாங்கம் வழங்கவுள்ளது” என்றார்
அமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும், போது பின்வருமாறு தெரிவித்தார்.
” எதிர்வரும் மேமாதம் 6ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரவுள்ள இந்த புதிய குடிவரவு திட்ட அமுலாக்கமானது, எமது திணைக்களம் உள்வாங்கவுள்ள 90000 க்கும் அதிகமானவர்கள் பின்வரும் வுகைக்குள்ளிருந்து தெர்ந்தெடுக்கப்பட வுள்ளார்கள்.
சுகாதார சேவைகள் போன்ற அத்தியாவசிய பிரிவுகளில் பணியாற்றும் வகையில் 20000 பேருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும். எமது குடிவரவுத் திணைக்களத்தினால் வரையறுக்கப்பட்டுள்ள எனைய அத்தியாவசிய துறைகளில் உள்வாங்கப்படும் வகையில் மேலும் 30000 பேருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் இந்த தொகையை விட கனடாவிற்கு உயர் கல்வி பெறுவதற்காக வந்து நான்கு வருட கல்வியை நெறியைப் பூர்த்தி செய்து பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்களிலிருந்து தகுதியான 40000 பேர் கனடாவின் வேறு பல துறைகளில் பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படும்.” என்றார்.