கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலிருந்து இன்று திங்கட்கிழமை முதல் கியுபெக் மாகாணத்திற்குச் செல்லும் பயணிகளுக்கு தடைவிதிக்கப்படும் என்று கியூபெக் மாகாணத்தின் துணை முதல்வர் ஜெனிவிவ் கில்பால்ட் தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் முதல்வர் டக் ஃபோர்டு தனது மாகாணமும் மூடப்பட்டதாகக் கூறியதையடுத்து அவரது அறிவிப்பு வெள்ளிக்கிழமை ட்விட்டரில் வெளியிடப்பட்டது.
” இந்த தற்காலிக மூடல் விவகாரத்தின் விதிமுறைகளை தீர்மானிக்க ஒன்ராறியோ அரசாங்கத்துடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம்” என்றும் கியுபெக் மாகாணத்தின் துணை முதல்வர் கில்போல்ட் கூறினார்.
” இந்த ஏற்பாட்டின் மூலம் நோய் பரப்புதல் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். இது பாதுகாப்பு தொடர்பான விஷயமாகும். தொற்றுநோயின் மூன்றாவது அலையின் தீவிரத்தை நிர்வகிப்பதற்கான மாகாணத்தின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக கியூபெக் மற்றும் மானிடோபாவுடனான ஒன்டாரியோவின் எல்லைகளில் சோதனைச் சாவடிகள் விரைவில் தோன்றும் என்றும் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு கூறினார்.
ஒன்ராறியோவுக்குச் செல்வோருக்கு, விதிவிலக்குகள் வழங்கும் வகையில் அவசர வேலைக்குச் செல்வோர், மருத்துவ உதவியை நாடிச் செல்வோர் மிகவும் அத்தியாவசியமான உணவுப் பொருட்களையும் மருத்துவப் பொருட்களையும் கொண்டு செல்வது மற்றும் போக்குவரத்து ஒப்பந்த உரிமைகளைப் பயன்படுத்துதல் ஆகியவை மிகவும் அவதானமாகக் கவனிக்கப்படும் என்றும் ஒன்றாரியோ மற்றும் கியுபெக் மாகாண அதிகாரிகள் அ றிவித்துள்ளனர்
“ஒன்ராறியோவிற்குள் நுழைய ஒரு நபருக்கு சரியான காரணம் இல்லையென்றால், அவர்கள் திருப்பி விடப்படுவார்கள்” என்று ஒன்றாரியோ மாகாணத்தின்சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் வெள்ளிக்கிழமை செய்தி யாளர்கள்மாநாட்டில் கூறினார்.
“இந்த சுகாதார நெருக்கடியை சமாளிக்க இது கடினமான ஆனால் தேவையான நடவடிக்கைகள்.”
ஒன்ராறியோவில் COVID-19 தொடர்பான பாதிப்புக்கள் அச்சம் தரும் வகையில் உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, கியூபெக் எல்லையை மூடுமாறு பார்ட்டி கியூபெகோயிஸ் கியுபெக் மாகாணத்தின் முதல்வர் பிரான்சுவா லெகால்ட்டை கேட்டிருந்தது
ஒட்டாவா-கட்டினோ எல்லைக்கு திங்கள்கிழமை திரும்புவதற்கான சோதனைச் சாவடிகள்
கியுபெக்குவா கட்சியின் மாகாண சுகாதார ஆலோசகர் ஜோயல் ஆர்செனோ மாகாண முதல்வரை “சும்மா நிற்க வேண்டாம்”, என்றும் வலியுறுத்தினார்.
கியூபெக் தனது எல்லையை மூடுவதற்கான முடிவை கியுபெக் மாகாண துணை முதல்வர் கில்போல்ட் அறிவித்த உடனேயே,ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு மற்றும் ஒன்ராறியோ அரசாங்கத்துடன் “எங்கள் குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நெருக்கமாக பணியாற்றப் போவதாகவும் தெரிவித்திருந்தார் மாறுபாடுகளுக்கு எல்லைகள் இல்லை. இந்த நோயின் தாக்கத்தை தகர்த்து எறிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்” என்றார்
கடந்த வசந்த காலத்தில் கியூபெக் அரசாங்கம் ஒட்டாவா ஆற்றின் குறுக்கே பாலம் மற்றும் படகு நேரடிடிச் சோதனைச் சாவடிகளை அமல்படுத்தியபோது இதேபோன்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
கியூபெக்கில் வெள்ளிக்கிழமை 1,527 புதிய கோவிட் பாதிப்பாளர்களும் மேலும் ஏழு இறப்புகளும் பதிவாகியுள்ளன, ஒன்ராறியோ மாகாணத்தில் தினசரி 4,812 கோவிட் -19 பாதிப்பாளர்கள் பதிவாகியுள்ளனர் என்பதும் இ ங்கு குறிப்பிடத்தக்கது.