ஒன்ராறியோவில் COVID-19 தடுப்பு நடவடிக்கைகளில் உதவுவதற்கா நியுபுவுண்ட்லேன்ட் லேபடோர் மாகாணத்தைச் சேர்ந்த ஒன்பது சுகாதார வல்லுநர்கள் குழு டொராண்டோ வந்தடைந்தது
(Toronto வில் இருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
ஒன்ராறியோ மாகாணத்தில் COVID-19 தொடர்பான மருத்துவ தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாரியோ மாகாணத்திற்கு உதவுவதற்கா நியுபுவுண்ட்லேன்ட் லேபடோர் மாகாணத்தைச் சேர்ந்த ஒன்பது மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு டொராண்டோ மாநகரை வந்தடைந்தது.
டொரொன்டோ பியர்சன் விமான நிலையத்தில் கனடிய விமானப் படையின் விமானம் மூலம் வந்திறங்கிய மேற்படி ஒன்பது மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழுவிற்கு தலைமை தாங்கி வந்திருப்பவர் நியுபவுண்ட் லேன்ட் லேபடோர் மாகாணத்தின் முதல்வர் அவர்களின் துணைவியார் வைத்தியப் பெருந்தகையான அலிசன் ஃபியூரி ஆவார் . அவர் பியர்சன் விமான நிலையத்தில் தன்னோடு உரையாடிய செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இந்தக் குழு எமது மாகாணத்திலிருந்து “உற்சாகப் புறப்பட்டது. நல்லதோர் பணிக்காக.. அதே போன்று தற்போதும் ஒன்றாரியோவை வந்தடைந்ததும் “உற்சாகமாக” உள்ளது” என்று கூறினார்,
இந்த குழு இன்று காலை நியுபுவுண்ட்லேன்ட் லேபடோர் மாகாணத்தின் செயின்ட் ஜான்ஸில் இருந்து கனேடிய படைகள் ஹெர்குலஸ் விமானத்தில் காலை ஒன்பது மணிக்கு புறப்பட்டு பியர்சன் விமான நிலையத்தை பிற்பகல் ஒரு மணிக்கு வந்தடைந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த குழுவை ஒன்றாரியோ மாகாணத்திற்கு அனுப்பியதன் மூலம், கனடாவில் பிரிதொரு மாகாணத்திற்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்க அனுப்பிவைக்கப்பட்ட முதலாவது மருத்துவக்குழு என்ற பெருமையை நியுபுவுண்ட்லேன்ட் லேபடோர் மாகாணம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது
ரொரன்ரோ வந்துள்ள இந்த நியுபுவுண்ட்லேன்ட் லேபடோர் மாகாண மருத்துவக் குழு ரொரன்ரோ பல்கலைக் கழகத்தின் மருத்துவ சிசிச்சை நிலையத்தை பணியாற்றும் என்று அறியப்படுகின்றது.