(மன்னார் நிருபர்)
(29-04-2021)
நானாட்டான் கமநல கேந்திர நிலையத்தில் சிறுபோக நெற் பயிர்ச் செய்கைக்காண காணிப்பதிவு இடம் பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மக்கள் எவ்வித சுகாதார நடை முறைகளையும் பின் பற்றாத நிலையில், நானாட்டான் கமநல கேந்திர நிலையத்தில் கூடி நின்ற நிலையில்,முருங்கன் பொது சுகாதார பரிசோதகர்களின் துரித நடவடிக்கைகளினால் குறித்த பகுதியில் ஏற்பட இருந்த அபாய நிலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
சிறுபோக நெற் பயிர்ச் செய்கைக்கா காணிப்பதிவு சகல கமநல கேந்திர நிலையங்களிலும் பதிவு செய்யும் நிகழ்வு இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை (29) நானாட்டான் கமநல கேந்திர நிலையத்தில் காணிப் பதிவு இடம் பெற்று வரும் நிலையில் மக்கள் எவ்வித சுகாதார நடை முறைகளையும் பின் பற்றாத நிலையில், நானாட்டான் கமநல கேந்திர நிலையத்தில் கூடி நின்றனர்.
முகக் கவசங்கள் அணியாமலும் ,போதிய சமூக இடைவெளியை பின் பற்றாமல் நூற்றுக்கும் அதிகமான மக்கள் அவ்விடத்தில் கூடி நின்றனர்.
இந்த நிலையில் குறித்த விடையம் தொடர்பாக முருகன் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உடனடியாக விரைந்து செயல் பட்ட சுகாதார வைத்திய அதிகாரி அவ்விடத்திற்கு பொது சுகாதார பரிசோதகர்கள்களை அனுப்பி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
நானாட்டான் கமநல கேந்திர நிலையத்தில் காணிப்பதிவுகளை மேற்கொள்ள வந்த மக்களை சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக முகக்கவசம் அணிய வைத்து சமூக இடை வெளியை கடைபிடிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
-இதனால் அப்பகுதியில் ஏற்பட இருந்த பாரிய அபாயம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
தேவையறிந்து மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு உடனடியாக செயற்பட்ட முருங்கன் பொது சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோருக்கு நானாட்டான் பிரதேச மக்களும் சமூக செயற்பாட்டாளர்களும் நன்றிகளை தெரிவித்தனர்.