மன்னார் நிருபர்
(10-05-2021)
எதிர்வரும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையை, எந்தவொரு பள்ளிவாசல்களிலும் நடத்தாதிருக்க வக்பு சபை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
கொவிட்-19 வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து, சுகாதார வழிகாட்டல்களுக்கமைய, கூட்டுச் செயற்பாடுகளை தவிர்க்கும் வகையில் குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே முஸ்லிம்கள் பெருநாளன்று தங்களது குடும்பத்தாருடன் தங்களது வீட்டிலேயே ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுமாறு, வக்பு சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.