(மன்னார் நிருபர்)
(13-05-2021)
இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு 13ம் திகதி வியாழக்கிழமை நானாட்டான் பிரதேச சபையின் 39 ஆவது அமர்வின் போது சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நானாட்டான் பிரதேச சபையின் 39 ஆவது அமர்வு 13ம் திகதி வியாழக்கிழமை (13) காலை 10 மணியளவில் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச் செல்வம் பரஞ்சோதி தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது நானாட்டான பிரதேச சபையின் உறுப்பினர் ஆர்.ஜீவன் அவர்களின் ஏற்பாட்டில் இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர், சக உறுப்பினர்கள் கலந்து கொண்டு உயிர் நீத்த மக்களுக்கு சுடர் ஏற்றி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து சபை அமர்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.