– பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்.
(மன்னார் நிருபர்)
(18-05-2021)
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை சுய தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வகையில் மன்னார் தாராபுரம் துருக்கி சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தின் சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகள் நாளை புதன் கிழமை(19) ஆரம்பிக்கப்பட உள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை சுய தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வகையில் மன்னார் தாராபுரம் துருக்கி சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தின் சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகள் நாளை புதன் கிழமை(19) ஆரம்பிக்கப்படும்.
ஒரே நேரத்தில் நூறு தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இடை நிலை சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் 543 ஆவது படைப்பிரிவின் உதவியுடன் தயார் படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை நிலையத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள குறித்த நிலையத்தில் சிகிச்சை வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளது.என தெரிவித்தார்.
இதே வேளை மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (17) மாலை மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் தற்போது வரை 53 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் ஜனவரி முதல் தற்போது வரை 395 கொரோனா தொற்றாளர்களும், மாவட்டத்தில் மொத்தமாக 412 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.என அவர் மேலும் தெரிவித்தார்.