(மன்னார் நிருபர்)
(18-05-2021)
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை சுய தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வகையில் மன்னார் தாராபுரம் துருக்கி சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்திற்கு ஒரு தொகை பொருட்கள் இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தில் சிகிச்சை பெற உள்ள நோயாளிகளுக்கான ஒரு தொகை நாளாந்த சுகாதாரப் பொருட்கள் மன்னார் மாவட்ட செயலாளரின் வேண்டு கோளுக்கு அமைவாக மன்னாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனித உரிமை செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் நிறுவனத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை 10.30 மணியளவில் குறித்த நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.திலிபன் அவர்களினால் மாவட்ட செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரி திருமதி ஏ. ஸரான்லி டிமெலிடம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி கனகரெட்னம் திலிபன் மற்றும் போரம் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் அருந்தவராஜா நிரோஜன் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களும் இணைந்து குறித்த பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.