(மன்னார் நிருபர்)
(30-05-2021)
மன்னாரில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (30) காலை விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன் கமரா பயன்படுத்தி மன்னார் பகுதிகளில் பொது மக்களின் நடமாட்டத்தை கண்காணித்துள்ளனர்.
இதன் போது கொரோனா கட்டுப்பாட்டை மீறிய 15 பேர் வரை இன்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன் கமரா பயன்படுத்தி மன்னார் பகுதிகளில் பொது மக்களின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.
இதன் போது மன்னாரில் மைதானங்களில் இளைஞர்கள் கூடி விளையாடியமை, வீதிகளில் கூடி நின்றமை ஆகியவை ட்ரோன் கமராவின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு மன்னார் பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
-கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ள மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன் கமரா பயன்படுத்தி மன்னார் பகுதிகளில் பொது மக்களின் நடமாட்டம் கண்காணிக்கும் நடவடிக்கை தொடரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறி அனுமதி இன்றி வெளியில் பயணிப்போர் மற்றும் வீதிகளில் அநாவசியமான முறையில் நடமாடுபவர்களை கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.