ஓம் சரவணபவ சேவா கனடா அறக்கட்டளையினர் வழங்கிய ரூபா 1,27,500 நிதி அன்பளிப்பின் மூலம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவலி கிழக்கு மற்றும் நாவலி தெற்கு ஆகிய இரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் கல்லுண்டாய் புதிய குடியிருப்பைச் சேர்ந்த 85 குடும்பங்கள் தற்போதைய Covid 19 காரணமாக தமது வாழ்வாதாரத்தினை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களின் அவசர உணவுத் தேவையினை பூர்த்தி செய்து கொள்வதற்காக உலர் உணவு பொருட்களை தந்துதவுமாறு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் நாவலி கிழக்கு சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரினால் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் சண்டிலிப்பாய் பிரதேச செயலக நாவலி கிழக்கு கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் பங்குபற்றுதலுடன் தலா ரூபா 1500 பெறுமதியில் 85 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் (5kg அரிசி, 3kg கோதுமை மா, 1 1/2kg சீனி, 400g 01 அங்கர் பால் மா ) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி அன்பளிப்பினை வழங்கிய ஓம் சரவணபவ சேவா கனடா அறக்கட்டளையினருக்கு பயனாளிகள் சார்பிலும் மற்றும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம்.