மன்னார் நிருபர்
(8-06-2021)
இந்திய நிறு டயமன்ட் கடர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சஞ்சய பேட் அவர்களினால் கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நேற்று (07) அலரி மாளிகையில் வைத்து 65 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பீ.சீ.ஆர். இயந்திரமொன்று வழங்கிவைக்கப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இந்த பீ.சீ.ஆர். இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது.
அதற்கமைய பீ.சீ.ஆர். இயந்திரத்தை சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கமைய தியதலாவ வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு தனியார் துறையிடமிருந்து கிடைக்கும் பங்களிப்பை கௌரவ பிரதமர் இதன்போது பாராட்டினார்.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான், நிறு டயமன்ட் கடர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சஞ்சய பேட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.