மன்னார் நிருபர்
10-06-2021
கடந்த வாரம் தென் பகுதி கடற்பரப்பில் தீபற்றிய எஸ் பேர்ல் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள பிளாஸ்ரிக் துண்டுகள் என நம்படும் சிறியளவிலான துணிக்கைகள் இன்று வியாழக்கிழமை(10) மன்னார் வங்காலை மற்றும் சிலாவத்துறை கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளன
இலட்சக்கணக்கான சிறிய பிலஸ்ரிக் துண்டுகள் மற்றும் முக கிரீம் ஒன்றும் கரையொதுங்கிய நிலையில் மன்னார் கடற்படை மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் முதல் கட்டமாக சம்பவம் இடம் பெற்ற பகுதிக்கு வருகை தந்து கரையொதுங்கிய பொருட்களை பார்வையிட்டதுடன் கரையொதுங்கிய பொருட்களின் மாதிரிகளையும் சேகரித்துள்ளனர்.
அதே நேரம் குறித்த கடல் பகுதிக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ்நிர்மலநாதன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் உற்பட அதிகாரிகள் வருகை தந்து நேரடியாக பார்வையிட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு தொடக் தற்போது வரை மேற்படி பொருட்கள் கரை ஒதுங்கி வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.