தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் இலங்கை ஜனாதிபதி கோத்தாபாயவிற்கும் இடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பை இன்னொரு திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னர் செய்யப்பட்ட ஏற்பாட்டின் படி நாளை புதன்கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு இந்த சந்திப்பு இடம் பெறுவதாக தீர்மானிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.