கனடிய வரலாற்றில் மிகப் பெரிய நிலக்கீழ் பயண இணைப்பு ரயில் சேவை விரிவாக்க கட்டுமானமான, மூன்று தரிப்பு நிலையங்களைக் கொண்ட, ஸ்காபரோ தொடரி வழித்தட நீட்டிப்பினை ஒன்ராறியோ அரசாங்கம் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளது. இப்புதிய நிலக்கீழ் வழித்தடமானது, ஸ்காபரோ மக்களுக்கு வேண்டிய சிறந்த போக்குவரத்து வசதியினை வழங்கும்.
இத்திட்டத்தின் மூலம், இதன் கட்டுமான காலத்தில் ஆண்டுதோறும் 3000 வரையான வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன், இது முடிவடைந்த பின்னர் ஸ்காபரோ பகுதியிலிருந்து நகரத்தின் பிற பகுதிகளுக்கு வேலைக்கும் பாடசாலைகளுக்கும் செல்வோருக்கு இலகுவான போக்குவரத்தினையும் வழங்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி நிலக்கீழ் பயண .இணைப்பு ரயில் சேவை விரிவாக்கப் பணிகளின் முதற்கட்டமாக கெனடி தொடரி நிலையத்திலிருந்து மக்கோவன் வீதி-ஷெப்பேட் வீதி சந்திப்பு வரையான 7.8 கிலோ மீட்டர் நீட்டிப்புக்கான கட்டுமானப் பணிகள் இடம்பெறும். சமநிலை ஒப்பந்த வேலைகளின்படி கட்டுமானப் பணகள் இடம்பெறும்.
ஒன’றாரியோ முதல்வர் போஃட் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்துத் திட்டத்துக்கு கனடிய நடுவண் அரசு ஒப்புதல் அளித்ததுடன், ஒன்ராறியோ மாநிலத்தின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நான்கு நிலக்கீழ் வழித்தடத் திட்டங்களுக்கான செலவில் 40 சதவீதத்தினை – அதிகபட்சமாக 10.7 மில்லியன் டொலர்களை – வழங்குவதெனவும் ஒப்புக்கொண்டுள்ளது.