தற்போது கனடாவில் முக்கிய விடயமாக பேசப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வரும் கனடாவின் பழங்குடி பிள்ளைகள் தங்கவைக்கப்பட்ட பாடசாலைகளில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான விவகாரத்தால் ரொறன்ரோவின் பிரபல ரைசன் பல்கலைக் கழகம் பல நன்கொடையாளர்களை இழக்கும் நிலை தோன்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ரைசன் பல்கலைக் கழகத்தில் உள்ள பல துறைகளில் கட்டடக் கலைப் பீடம் மிகவும் உயர்ந்த தரத்தைக் கொண்டதாகும்.
இங்கு கட்டடக் கலையில் பட்டம் பெற்ற பலர் அங்கம் வகிக்கும் ‘கனடாவின் கட்டடக் கலைஞர்கள் சங்கம்’ கூட மேற்படி பழங்குடியினரைத் தங்கவைத்து கற்பிக்கும் பாடசாலைகளை நடத்தி வந்துள்ளது. எனவே பழங்குடி பிள்ளைகளின் உடல் எச்சங்கள் மற்றும் எலும்புக் கூடுகள் ஆகியன கண்டு பிடிக்கப்பட்ட விடயத்தில் மேலதிக விபரங்களைக் கண்டறிய முயன்ற பல நன்கொடையாளர்கள், கனடாவின் கட்டடக் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகத்தில் இயங்கிய வதிவிட பாடசாலைகளிலும் இவ்வாறான படுகொலைகள் இடம்பெற்றதை அறியக்கூடியதாக இருந்துள்ளது.
எனவே அதிக கட்டடக் கலைஞர்களை உருவாக்கும்; ரைசன் பல்கலைக் கழகத்திற்கு தொடர்ந்து தங்கள் நன்கொடைகளை வழங்குவதில்லை என்று நன்கொடையாளர்கள் அறிவித்துள்ளார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ரைசன் பல்கலைக் கழகத்திற்கு கிடைக்கும் மொத்த நன்கொடை வருவாயில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டாலும் அது, பாரியதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் கடந்த ஆண்டு 2020 இல் ஆண்டில் நன்கொடையாளர்கள் அதிகரித்ததாகவும் ரைசன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஆனால் அதிருப்தி அடைந்த நன்கொடையாளர்களில் சிலர் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு கூறிய செய்தியில் கனடா நாட்டின் தேசிய அவமானத்திற்குரிய ஒரு விடயமாகப் பார்க்கப்பட வேண்டிய கனடாவின் வதிவிடப்பாடசலைகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தால் பல கனடியர்கள் அழுத வண்ணம் உள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
19 ஆம் நூற்றாண்டின் அமைச்சரும் கல்வியாளருமான எகெர்டன் ரைர்சன், கனடாவின் வதிவிடப் பாடசாலைகள் திட்டத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய நபராக இருந்தார், அதனை நிர்வகித்து வந்தவர்கள் பழங்குடி குழந்தைகளை தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக கொண்டு சென்று அவர்களை கொடூரமான மற்றும் ஆபத்தான நிலைமைகளுக்கு உட்படுத்தினர்.
பூர்வீக வக்கீல்கள் பாடசாலைகளின் பெயரை மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர், ஆனால் சமீபத்திய மாதங்களில் நாடு முழுவதும் உள்ள வதிவிடப் பாடசாலைகளில் நூற்றுக்கணக்கான பழங்குடியின குழந்தைகளின் கல்லறைகள் மற்றும் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த விவகாரம் கனடாவை பொறுத்தளவில் ஒரு வெட்கப்படவும் கோபப்படவும் வேண்டிய ஒரு விடயடாக மாறி தீவிரமடைந்துள்ளது.
கனடாவின் பல பணக்கார குடும்பங்கள் மற்றும் நிதியாளர்களைக் கொண்ட ரியர்சனின் நன்கொடையாளர்கள், பல்கலைக்கழகங்களுக்கு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும் மூலதன திட்டங்களை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தக்கூடிய பணத்தை வழங்குகிறார்கள். ஒரு சில நன்கொடையாளர்கள் ரியர்சனின் பெயரைப் பற்றி தங்கள் கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
ஆனால், ரைசன் பல்கலைகழகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் தற்போது ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. இந்த ரைசன் என்னும் பெயரே மேற்படி பழங்குடியினரின் பிள்ளைகள் கற்று வந்த சில வதிவிடப் பாடசாலைகளின் பெயரோடும் ஒத்து காணப்பட்டது என்றும் சில நன்கொடையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் “நாங்கள் ரைசன் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றும் வரை அல்லது பல்கலைக்கழகத்தின் பெயரைத் தக்க வைத்துக் கொள்ளும் வரை அதற்கு நன்கொடைகளை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளோம” என்று கூறியுள்ளனர்.