திருகோணமலையில் சம்பவம்
விடுதலை புலிகள் இயக்கத்தையும் தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றியும் பதிவுகளை வைத்திருந்தவர் கைது செய்யப்பட்ட ஒரு சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
தனது தொலைபேசியின் மூலம் இணையத்தளம் மற்றும் முகநூல் பக்கங்களில் விடுதலை புலிகள் இயக்கத்தையும் தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றியும் பதிவுகளையும் தொடர்ச்சியாக தனது நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் அனுப்பிவைத்த ‘ஆட்டோ’ வாகன சாரதி ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில் செய்திகளைப் பதிவிட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் புகழும் வகையிலான பதிவுகளை குறித்த சந்தேகநபர் பதிவிட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் குழுவாக தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளமையும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. திருகோணமலை குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியின் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான செயற்பாடுகள் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டம் ஆகியவற்றின் குற்றமாகக் கருதப்படுவதால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இணையத்தளத்திலும் முகநூலிலும் தானாக தோன்றும் விடுதலை புலிகள் இயக்கத்தையும் தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றியும் பதிவுகளை எதேச்சையான நாங்கள் பார்க்க வேண்டிவருகின்றபோது அதற்கு யாரைத் தண்டிக்க வேண்டும் என்பதை பொலிசார் அறிந்து கொள்ள வேண்டும் என்று திருகோணமலை பொலிசாருக்கு தெரிய வேண்டும் என்று ஒரு தமிழ் பேசும் சட்டத்தரணி தெரிவித்ததாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.