ஆண்டு ஒன்று ஓடி விட்டது தெய்வமே! எங்கே எங்களின் அப்பா என நான்கு திசையிலும் தேடி மனம் வெதும்பி அழுவதை இரக்கம் அற்ற இறைவா ஏன் வைத்தாய்? என இங்கு பாவி நான் ஏங்குகின்றேன். அன்பே உனது உடன்பிறப்புகளையும் சொந்த பந்தந்தங்களையும் ஊர் மக்களையும் உங்களது கனீர் என்ற குரலுடன் அன்போடு அரவணைக்கும் தன்மைகள் இல்லாது இங்கு பாவிகள் நாங்கள் பரிதவிக்கின்றோம்.
அப்பா உன் நான்கு பிள்ளைகளும் அன்பு மருமக்கள் மூவரும் குட்டி ஆரனும் தான். உன் உடன் பிறந்த அண்ணன் குடும்பமும் வந்த சொந்தங்களும் உங்களின் கனீர் என்ற குரல் ஓசை கேட்காது எனது வாசலில் வந்து உங்களின் நிழலில் எதை சொல்வது என்று திக்கு தடுமாறி தவிக்கின்றார்கள். அப்பா இதற்காகவா நான் மனிதப்பிறவி எடுத்தேன் என்று நெஞ்சு வலிக்குதப்பா.
அன்பே நீங்கள் உங்கள் கைகளால் ஊட்டிய உணவால்தான் நாங்கள் உயிர்மூச்சு விடுகின்றோம். அப்பா உங்களின் நற்சிந்தனைகள் சுமந்து பிள்ளைகள் மகத்தான் வாழ்க்கை வாழ்கின்றார்கள். அதை பார்க்க என் தெய்வம் இல்லையே என்று கண்ணீரில் மூழ்கவிட்ட காலனுக்கு கண்ணில்லையா?
அப்பா ஏகாதசியில் திதி வருவதால் சொர்க்க வாசலில் சுகமான காற்றை சுவாசிப்பீர்கள் என என் மனதிற்கு நான் ஆறதல் சொல்வேன். ஆனால் அப்பா என் மனம் இதற்காகவா அப்பா நீங்கள் இத்தனை விரதம் இருந்தீர்கள் என நான் இங்கு ஏங்குகின்றேன். நான் நீங்கள் எதைக் கேட்டாலும் தந்தேன். தாயகம் செல்லும் போது எனை அழைத்தீர்கள் அப்பா நான் வராமல் இருந்ததால் பாசத்தின் பிரிவு எனக்கு சோகத்தின் தொடக்கம் அப்பா.
அப்பா நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை எப்பிறப்பிலும் நமக்குக் கிடைக்காது. எல்லா உறவுகளும் உங்கள் பாச பந்தத்தில் துடிக்க இதை என்னால் தாங்க முடியாது. ஆண்டவா! என் அப்பாவை திருப்பி தந்து விடு என அழுது புலம்புகின்றேன். அப்பா எங்களின் கண்ணீர் காயவில்லை இனி தாண்டும் நாட்கள் எல்லாம் உங்களின் நினைவுதான் அப்பா. நீங்கள் அடியோடு சாய்ந்த நேரம் என் மனம் வலித்த வலிப்பை என்னால் தாங்க முடியவில்லையே! அன்போ எல்லாவற்றையும் எனக்கு காட்டித் தந்துவிட்டு தைரியத்தையும் தந்து நான் ஏலாது என்று என் கையை கடைசிவரை பிடிப்பீர்கள் என்று நான் நினைக்க வைத்து இருந்த என் செல்வத்தை எடுத்த ஈசனுக்கு இரக்கம் இல்லையா?
காலத்தின் சோதனையிலும் வேதனையிலும் காலன் என்னை கடத்திவிட்டான். என் தெய்வத்திற்கு எழுத என் மனம் பேனா எடுக்க விடவில்லை .
இதுவே எனக்கு விதி என எழுதினேன் இம்மடலை என் தெய்வமே உமது கடமைகளை நான் இனிதே நிறைவேற்றுவேன் அப்பா.
நான்கு சடலங்களுக்கு நடுவே உங்கள் திருவுருவம் இனி நாளெல்லாம் அதுவே எனக்கு காவல் தெய்வம் அப்பா.
உங்களின் ஆத்மா சாந்தி அடைய பாணாவெட்டி அம்மனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்
திருமதி பகவதி கனகலிங்கம் – 905 472 7698
கணேசலிங்கம் குடும்பம் – 416 504 2449
அமுதலிங்கம் குடும்பம் – 647 716 1681