கனடாவின் ஹமில்ரன் நகரத்தில் கடந்த திங்கட்கிழமை ஒரு இஸ்லாமிய குடும்ப உறுப்பினர்கள் மீது மீண்டும் ஒரு தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது. ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் தாயும் அவரது மகளும் மதரீதியான அவதூறுகளையும் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டதைத் தொடர்ந்து குற்றச் செயலாக கருதப்பட்டு மேற்படி சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட 40 வயது நபர் ஒருவர் ஹமில்ரன் பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
திங்கட்கிழமையன்று இரவு 9:30 மணியளவில் அன்காஸ்டர் மீடோவ்லேண்ட்ஸ் பகுதியில் ஒரு வாகன நிறுத்துமிடம் வழியாக 62 வயதுடைய தாய், மற்றும் 26 வயதுடைய மகள், ஆகியோர் நடந்து கொண்டிருந்ததாகவும் அப்போது ஒரு வாகனம் ஒரு வாகனம் தரிக்கும் இடத்திலிருந்து வெளியேறிய மேற்படி தாயையும் மகளையும் துன்புறுத்தும் வகையில் பயமுறுத்தும் வகையில் ஆவேசத்துடன் மதரீதியான தீய வார்த்தைகளால் திட்டியவண்ணம் அங்கிருந்து விலகிச் சென்றதாகவும் பொலிஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள், மேற்படி தாக்குதல் சம்பவத்தில் தாய் மற்றும் மகள் இருவரில் சந்தேக நபர் கிட்ட நெருங்கி கிட்டத்தட்ட தாக்க முனைந்தார் என்றும் தெரிய வந்துள்ளது.
இஸ்லாமிய சமூகத்தை குறிவைத்து அவதூறுகளைப் பயன்படுத்தும் போது மேற்படி சந்தேச நபர் தாய் மற்றும் மகளுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தாயும் மகளும் வீதியின் குறுக்கே ஓடிச் சென்று சில புதர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டதாகவும் அந்த சந்தேக நபர் அவர்களைத் தேடியதாகவும், பின்னர் புதர்களுக்கு கீழ் மறைந்திருந்த அவர்களைக் கண்டதும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பொலீசார் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
அப்போது அவர்களின் ஆபத்தான நிலையை கண்ட பெண்களில் ஒருவர் உதவிக்காக கத்திக்கொண்டு ஓடினார், அத்துடன் அருகில் சென்றுகொண்டிருந்த பொது மக்கள் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் அதில் தலையிட்டனர். அதனைத் தொடர்ந்து அந்த சந்தேக நபர் அங்கிருந்து வேகமாக விலகிச் சென்றார் எனவும் கான்ஸ்ட். போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேற்படி விடயமாக, கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் கனடாவின் தேசிய தொலைக்காட்சிக்கு வழங்கிய செய்தியில் இந்த சம்பவத்தால் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாகவும், சம்பவம் நடைபெற்றபோது, அந்த தாயும் மகளும் ஹிஜாப் அணிந்திருந்ததாகவும், இதனைக் கண்ட அந்த சந்தேக நபருக்கு ஆத்திரம் மேலிட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.