கடந்த பல மாதங்களாக கனடாவின் பசுமைக் கட்சிக்குள் இடம்பெற்ற உள் முரண்பாடுகள் மற்றும் கசப்பான மோதல்களிலிருந்து தற்போது கட்சியும் அதன் தலைமைப் பீடமும் விடுபட்டுள்ளதாகவும் தற்போது அதன் தலைவி அன்னமி போல் அவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் அனைந்தும் ஓய்ந்து விட்டதாகவும் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு கட்சியின் உயர் மட்ட அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் கட்சியின் தற்போதைய தலைவர் அன்னமி போல் அவர்களது தலைமைப் பதவியானது, பாதுகாப்பானது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் மேலும் அவரது பதவிக்கு அச்சுறுத்தல்கள் தடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். கடந்த ஆண்டின் தலைமைப் போட்டியில் அன்னமி போல் அவர்களோடு எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான போட்டியாளரின் தொந்தரவுகளும் குழப்பங்களுமே இந்த முரண்பாடுகளுக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் நேற்று இடம்பெற்ற ஒரு செய்தியாளர்கள் மாநாட்டில் அவர்கள் போல் உரையாற்றும் போது பின்வருமாறு கூறினார்: “கட்சிக்கு வெளியே தவறான விடயங்கள் எதுவும் பேசப்படலாம். ஆனால் இதுதான் முடிவு என்று நான் நிச்சயமாக நம்புகிறேன், ஆனால் அந்த உத்தரவாதத்தை நான் உங்களுக்கு வழங்க முடியாது.
“அடுத்த தேர்தலுக்கு நான் எங்கள் கட்சி உறுப்பினர்களையும் கட்சியையும் வழிநடத்த விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார். “எனது உறுப்பினர்களுக்கும் கனடாவிற்கும் எனது சேவையை வழங்க விரும்புகிறேன், இல்லையென்று உணர்ந்தவர்கள் ஒரு நடவடிக்கை எடுக்க மிகவும் பொருத்தமான நேரம் வரும் வரை காத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.”
குனடாவில் மத்திய அரசியல் சார்ந்த அல்லது மத்திய பாராளுமன்றம் சார்ந்த ஒரு கூட்டாட்சி கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பினத் தலைவருக்கான எதிர்ப்பு நடவடிக்கை நாடகத்தின் சமீபத்திய திருப்பம் இப்போது அமைப்பின் உயர்மட்ட ஆளும் குழுவான பசுமைக் கட்சியின் மத்திய குழுவினால் தலைவருக்கு எதிராக வாக்கெடுப்பு தவிர்க்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அந்த வாக்கெடுப்பு அன்னமி போல் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான செயல்முறையைத் தூண்டக்கூடும். சபை உறுப்பினர்கள் 75 சதவீதம் பேர் அவரை வெளியேற்ற வாக்களித்திருந்தால், ஆகஸ்ட் 21 அன்று நடைபெறும் அடுத்த பொதுக் கூட்டம் வரை அன்னமி போல் தனது தலைமைப் பதவியை தொடரலாம் என்று கட்சியின் உறுப்பினர்கள் முடிவு செய்திருப்பார்கள் எனவும் அறியப்படுகின்றது. வாக்களிப்பு ரத்து செய்யப்பட்டதாக கட்சி திங்கட்கிழமை காலை அறிவித்தது,