கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்திருக்கும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் இவ்வருட மஹோற்வசத்தின் தேர்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (25ம் திகதி) காலை தொடக்கம் சிறப்பாக நடைபெற்றது.
அன்றைய தினம் ஆலயத்தின் பிரதம குருவும் ஸ்தாபகருமான சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்கள் தனது சக சிவாச்சாரியார்கள் மற்றும் உப- குருக்கள்மார்கள், உதவியாளர்கள் சகிதம் தேருக்கு அருகில் அர்ச்சனை மற்றும் பூசைகளை ஆற்றி வர, தேர்த்திருவிழா உபயகாரரான வர்த்தகப் பிரமுகர் திரு கணேசன் சுகுமார், மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் அரிஸ் பாபிகியன், உட்பட பலர் அங்கு தேரின் முன்பாக நேர்த்தியாக நடந்து வர ஆலயத்தின் வெளிவீதி வழியாக அழகுடன் நகர்ந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் நின்று விநாயகர் தேரேறி வரும் காட்சியினைக் கண்டு களித்தனர்.
ஆலயத்தின் சார்பில் அனைத்து சுகாதாரக் கட்டுப்பாடுகளும் கடைப்பிக்கப்பெற்றன.
அத்துடன் அனைத்து அடியார்களும் அதற்கு ஒழுகி கட்டுப்பாடுகளுடன் நடந்து கொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
(படங்கள் மற்றும் செய்தி:- சத்தியன்)
More Picture
https://www.facebook.com/photo/?fbid=5052208308140992&set=pcb.5052232848138538