திருகோணமலை மாவட்டத்தில் 12 பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை அமைத்துக் கொள்வதற்கான உபகரணங்களை அனைத்துலக மருத்துவ நல அமைப்பு IMHO -USA Ratnam Foundation (UK) இணைந்து வழங்கி வருகின்றது. அதனடிப்படையில் திஃஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரிக்கான திறன் வகுப்பறைக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு திறன் வகுப்பறை திறப்பு விழா 16-07-2021 வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு கல்லூரி அதிபர் திருமதி.லி.ரவிராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதம குருக்கள் சோ.ரவிச்சந்திரன் அவர்கள், மற்றும் பிரதம விருந்தினராக திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.சிவானந்தம் ஸ்ரீதரன் அவர்கள், விசேட விருந்தினராக IMHO நிறுவனத்தின் திருகோணமலை மாவட்ட நலன்புரி இணைப்பாளர் திரு.தி.பிரபாகரன் அவர்கள், இளைப்பாறிய ஆசிரியர் கார்த்திகேசு மணிமேகலை அவர்களும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பாடசாலை சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.பிரதம விருந்தினர் தமது உரையில் மகளிர் பாடசாலைகளில் இப்பாடசாலை முன்னணியில் திகழ்கின்றது. அகில இலங்கையிலும், சர்வதேசத்திலும் புகழ் பூத்த ஒர் பாடசாலை. 15.07.2021 இல் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் பரிசளிப்பில் அதிக இடங்களை இக்கல்லூரி மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். இங்கு திறன் வகுப்பறைகளை அமைத்தல் மிகவும் சிறப்பானதும் மிகவும் பொருத்தமானதுமாகும் எனவும் தெரிவித்தார்.
அதிபர் தனது உரையில், ஐஆர்ழுநிறுவனம்இ சுயவயெஅ குழரனெயவழைn னும் இணைந்து வட-கிழக்கில் திறன் வகுப்பறைகளை அமைத்து கற்பித்தலில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் எனத்தெரிவித்ததுடன் இதற்காக உதவிய IMHO நிறுவன தலைவர் வைத்திய கலாநிதி திருமதி ராஜம் தெய்வேந்திரன், வைத்திய கலாநிதி திரு.சு.நித்தியானந்தன், IMHO நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதியாக செயற்படும் முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.ளு.கிருஸ்ணகுமார் மற்றும் IMHO நிறுவனத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் திரு.வு.பிரபாகரன், பழைய மாணவர்களுக்கும் உளங்கனிந்த நன்றிகளை பாடசாலை சமூகம் சார்பாக தெரிவித்தார். மாணவர்களின் மும்மொழிகளிலான நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.
28.07.2021