கனடா உதயன்-பத்திரிகை கடந்த 6ம் திகதி வெள்ளிக்கிழமை அச்சேற்றிய வெள்ளிவிழா ஆண்டு சிறப்பிதழ் கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் வெளியிடப்பெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்கள் தனது உப சிவாச்சாரியார்கள் சகிதம் மிகுந்த சிரத்தையோடு செய்திருந்தார்.
ஆலயத்தில் இடம் பெற்ற சிறப்புப் பூஜைகளையடுத்து வெளியீட்டு வைபவம் இடம்பெற்றது. உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மற்றும் அவரது பாரியார் ஆகியோருக்கு கௌவரம் வழங்கப்பெற்று பின்னர் பிரதம குரு சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்கள் உதயன் பத்திரிகையின் சமூகப் பணி மற்றும் வர்த்தக சமூகத்தை ‘உதயன்’ எவ்வாறு ஊக்குவித்து வருகின்றது போன்ற விடயங்களைக் கூறினார்.
மேலும் தனது ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெறுகின்ற விசேட திருவிழாக்கள் மற்றும் அபிஷேகங்கள் ஆகியவை தொடர்பான செய்திகளையும் விமர்சனங்களையும் எவ்வாறு உதயன் பத்திரிகை மக்களுக்கு கொண்டு செல்கின்றது என்பதையும் விளக்கமாகக் கூறினார்.
தொடர்ந்து ஆலயத்தில் கூடியிருந்தவர்களுக்கு ‘உதயன்’ பத்திரிகைப் பிரதிகள் மற்றும் பிரசாதம். ஆகியன வழங்கப்பெற்றன.
இங்கு காணப்படும் புகைப்படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்-
(படங்கள் செய்தி:- ஜெயா ஐயா)