(மன்னார் நிருபர்)
(24-08-2021)
ஜேர்மன் நாட்டைச் வசிப்பிடமாகக் கொண்ட வணக்கத்துக்குரிய வணபிதா அல்பிரட் மணிமாறன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று (24) திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இலங்கைக்கு வருகை தந்த ஜேர்மன் நாட்டைச் வசிப்பிடமாகக் கொண்ட வணக்கத்துக்குரிய வணபிதா அல்பிரட் மணிமாறன் அவர்களை பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வணக்கத்திற்குறிய வணபிதா கலாநிதி எஸ்.சந்திரகுமார் அவர்கள் வரவேற்ற நிலையில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றார்.
யாழ் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட குறிய வணபிதா அல்பிரட் மணிமாறன் வட மாகாண பொலிஸ்மா அதிபரை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாகவும்,கொரோனா தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரை யாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.