(25-09-2021)
ஊரடங்கு அமுல் படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் உலாவித் திரிந்தவர்களிற்கு இன்றைய தினம் (25) முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக வவுனியா நகரின் முக்கிய பகுதிகளான “சதொச” வீதி, மற்றும் ஏ9 வீதி போன்ற பல்வேறு பகுதிகளில் பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்களினால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது
இதனையடுத்து குறித்த 12 பேரையும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.