(27-08-2021)
எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவு செய்யப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கியூப தூதுவரை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்து கலந்துரையாடிய போது, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை செப்டம்பர் மாத நடுப்பகுதியில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் நிறைவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் சகல பிரஜைகளுக்கும் முழுமையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதை அடுத்து 3ஆம் தடுப்பூசி வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை எதிர்காலத்தில் வீடுகளுக்கு சென்று அன்டிஜென் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.