(28-08-2021)
தற்போது கொழும்பு முழுவதும் நூற்றுக்கு நூறு வீதம் பரவிக்கொண்டிருப்பது டெல்டா திரிபு வைரஸ் ஆகும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப்பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இது தவிர, இலங்கையில் சூப்பர் டெல்டா திரிபு உருவாகியிருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பில் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் நாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் காரணமாக செப்டெம்பர் மாதம் அளவில் சில மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.