மன்னார் நிருபர்
(28-08-2021)
யாழ் மாவட்ட வைத்தியசலைகளுக்கு கொரொனா கால உதவியினை ந மக்கள் விடுதலை முன்னணி இன்றைய தினம் வழங்கி வைத்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியால் கொரொனா தொற்றால் பாதிக்கப்படும் மக்களுக்காக இன்று (28 .08.2021) யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியச்சாலைக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான K.95 MASK, SERGICAL MASK, SENITIZER, HAND WASH and HAND GLOVES உள்ளிட்ட வைத்தியச்சாலைக்கு கொரொனா காலத்திற்கு தேவையான பொருட்களை வழங்கிவைத்தது.
ஆயுர்வேத வைத்தியச்சாலையின் பிரதான வைத்தியர் திருமாள் அவர்களிடம் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட குழு உறுப்பினர்களான தோழர் அம்பலவாணர் கணபதிபிள்ளை, தோழர் மாஹீர்.
தோழர் கிருஷ்ணா, தோழர் விவேக் ஆகியோர் வைத்தியச்சாலைக்கு கொண்டுச்சென்று கைளித்தனர்.
எதிர்வரும் நாட்களில் ஏனைய வைத்தியச்சாலைகளுக்கு இவ்வாறான பொருட்கள் வழங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.