மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்
(மன்னார் நிருபர்)
(01-09-2021)
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (31) மாலை மேலும் புதிதாக 32 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் 643 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் கோவிட்-19 நிலவரம் தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகளின் போது நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (31) மாலை மேலும் புதிதாக 32 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை 31 ஆம் திகதி வரையான ஒரு மாத காலப்பகுதியில் 643 கோவிட்-19 தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் 1667 தொற்றாளர்களும்,மாவட்டத்தில் இதுவரை 1684 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மன்னார் மாவட்டத்தில் இதுவரை 19 கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளது.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.