(12-09-2021)
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினரால் கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு களில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 12,400 சிகரெட்டுகளுடன் இருவர் சந்தேகத்தில் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர்கள் முகத்துவாரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். முகத்துவாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.