கடந்த வெள்ளிக்கிழமை கனடா ரொரன்றோ மாநகரில் ஆரம்பமான ரொறன்றோ சர்வதேச தமிழ்த் திரைப் பட விழாவின் இறுதிநாள் இன்றாகும்
கடந்த வெள்ளிக்கிழமை 10ம் திகதி கனடா ரொரன்றோ மாநகரிில் ஆரம்பமான ரொறன்றோ சர்வதேச தமிழ்த் திரைப் பட விழாவின் இறுதிநாள் இன்று ஞாயிற்றுக்கிழமை 12ம் திகதியாகும்.
இன்று மதியம் தொடக்கம் இரவு 10 மணி வரை எல்லாமாக 45 குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன.
நேற்று 11 ம் திகதி இரண்டாம் நாள் சனிக்கிழமையன்று எமது ‘உதயன்’ குழு திரையிடப் பெற்ற சில படங்களை பார்வையிட்டது. நேற்று பல திரைப்படங்களோடு எமது ஈழ அரசியல் மற்றும் போராட்டம் தொடர்பான ‘மேதகு’ திரைப்படம் திரையிடப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு திரைப்படம் என்றும் கூறலாம்.
நேற்று உதயன் குழு பார்வையிட்ட திரைப்படங்கள் பிரபல நடிக நடிகைகள் நடித்தவை அல்ல. புதிய தயாரிப்பாளர்களின் ‘கூட்டணி’கள் எமக்கு வழங்கி திரைப்படங்கள். நடிக நடிகையர்கள் ஒளிப்பதிவு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் புதிய முகங்களே.
அவ்வாறு இருந்தும். அற்புதமான திரைப் படங்களைப் பார்க்க முடிந்தது. நேற்று திரைப் படவிழாவைப் பார்த்து ரசிக்க வந்தவர்கள் தொடர்ச்சியாக பத்துப் படங்களையும் பார்த்து மகிழ்ந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
உதயன் குழுவின் பார்வையில் இந்த ரொறன்றோ சர்வதேச திரைப்பட விழாவின் மூலம் மட்டுமே நாம் நல்ல திரைப்படங்களைப் பார்த்து மகிழவும் விமர்சனங்களைச் செய்யவும் முடியும் என்பதை அறியக்; கூடியதாக இருந்தது.
இன்று திரைப் படவிழாவைப் பார்வையிடச் செல்ல விரும்புவோர் 416 832 7306 என்னும் இலக்கத்தை அழைக்கவும்
செய்தியும் படங்களும்;- சத்தியன்