எதிர்வரும் செப்டம்பர் 20ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இம்முறை மக்கள் தேர்தல் நாளுக்கு முன்னரேயே வாக்களிக்கும் சலுகையை அதிகமாக பயன்படுத்தியுள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாட்டில் சுமார் இரண்டரை மில்லியன் கனடிய மக்கள் இந்த தேர்தல் நாளுக்கு முன்னரேயே வாக்களிக்கும் சலுகையை பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி அனைத்து கட்சித் தலைவர்களையும் மகிழ்ச்சி கொள்ள வைத்துள்ளது என்று அறியப்படுகின்றது
கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட்ட இந்த சிறப்பு வசதியினூடாக முதல் நாளில் மொத்தம் 1.3 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளதாக எமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன..
மேலும் இந்த முன்னரேயே வாக்களிக்கும் வசதியானது திங்கட்கிழமை இரவு 9 மணி வரை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பெற்றது.
2019 பெடரல் தேர்தல் வாக்குப்பதிவை ஒப்பிடுகையில், இந்த முறை முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை முதல் நாளில் பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை சிறிது அதிகரித்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
2019ல் முன்கூட்டியே வாக்களித்தவர்கள் மொத்தம் 4.7 மில்லியன். 2015ல் இந்த எண்ணிக்கை 3.65 மில்லியன் என பதிவாகியிருந்தது.
கனேடியர்கள் சிறப்பு அனுமதி பெற்று வார நாட்களிலும் வாக்களிக்கலாம். இந்த முன்கூட்டியே வாக்களிக்கும் திட்டத்தின் படி சுமார் இரண்டரை மில்லியன் வாக்களித்துள்ளார்கள் என்று அறியப்படுகின்றது