(14-09-2021)
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்ப கோரிக்கை கொழும்பு நீதிமன்றத்தினால் நீராகரிக்கப்பட்டுள்ளது.
மாவனெல்லையில் புத்தர் சில உடைப்பு சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் உறவு வைத்திருந்த குற்றச்சாட்டில் அசாத் சாலிக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அசாத் சாலியின் சார்பில் அவரது வழக்கறிஞர் மைத்திரி குணரத்னவால் பிணை விண்ணப்ப கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குறித்த பிணை கோரிக்கையை நிராகரித்துள்ளதுடன், அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தவிட்டுள்ளார்.