அண்மையில் காலமாகிய தமிழறிஞர் த. துரைசிங்கம் நினைவஞ்சலி நிகழ்வுகள் கனடா நாட்டிலும் சுவிஸ் நாட்டிலும் 19 -ம் திகதி (19 – 09 – 2021) ஞாயிறு மாலை நடைபெறவுள்ளன.
‘இலக்கிய வித்தகர் – கலாபூஷணம்” – ஓய்வுநிலை மாவட்டக் கல்விப் பணிப்பாளர் த. துரைசிங்கம் நினைவஞ்சலி நிகழ்வு கனடா – ஸ்காபுரோ ஐயப்பன் இந்து கலாசார மண்டபத்தில் (635, Middlefield Rd, Scarborough, ON MIV 5B8) ஞாயிறு மாலை நடைபெறவுள்ளது.
கனடாவில் சிறப்பாகச் செயற்படும் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் இந்நிகழ்வினை ஒழுங்கு செய்துள்ளது.
கனடாவிலுள்ள தீவக மக்களும் மற்றும் எழுத்தாளர்கள் – தமிழ் அபிமானிகளும் இந்நிகழ்வில் பெருமளவில் கலந்துகொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிஸ் பேர்ண் நகரில் ஞானலிங்கேசுவரர் திருக்கோவில் மண்டபத்தில் (Eropaplatz 1 B, 3008 Bern) நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கவிதாஞ்சலி – நினைவுப்பகிர்வுரைகள் இடம்பெறவுள்ளன.
ஊடகவியலாளர்கள் – எழுத்தாளர்கள் – கல்வியாளர்கள் -புங்குடுதீவைச் சேர்ந்த பழைய மாணவர்கள் ஆகியோர் நினைவுரை நிகழ்த்துவர்.
சூம் (Zoom) வழியே இலங்கை – கனடா – இலண்டன் – பிரான்ஸ் நாடுகளிலிருந்தும் பலர் உரையாற்றவுள்ளனர்.
சுவிஸ் நாட்டில் வாழும் புங்குடுதீவின் அனைத்துப் பாடசாலை பழைய மாணவர்களும் நலன்விரும்பிகளும் இந்நிகழ்வினை ஒழுங்குசெய்துள்ளனர்.