கனடாவில் மொன்றியால் மற்றும் ரொறன்ரோ ஆகிய நகரங்களில் தியாகி திலீபன் வணக்க நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் புதன்கிழமை 15ம் திகதி தொடக்கம் இந்த வணக்க நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த வகையில் தியாகி திலீபன் நினைவாக கனடா ‘பைரவி நுண்கலைக் கூடம்’ நடத்தும் தொடர்ச்சியான வணக்க நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை தொடக்கம் இடம்பெற்று வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கல்லுரியின் ஸ்தாபகர்கள் மற்றும் மாணவ மாணவிகள். அவர் தம் பெற்றோர்கள் ஆகியோர் செய்திருந்தனர். நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் கவிஞர் அகணி சுரேஸ் கவிதாஞ்சலி நிகழ்த்துதையும் செல்வி பிரேமிகா ஜெயச்சந்திரன் பாடல் ஒன்றைப் பாடுதையும் காணலாம். (படங்கள்; சத்தியன்😉)