(19-09-2021)
வவுனியாவில் நேற்றையதினம் இருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்
குறித்த நபர்களில் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்சாவடைந்தார்அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
மற்றயவர் வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள முதியோர் காப்பகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்திருந்தார்.
அவருடன் குறித்த முதியோர் காப்பகத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளதுடன் அங்கு தங்கியுள்ள 40 ற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.